Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாது : ஹெல உறுமய அறிவிப்பு

நாட்டின் 68வது சுதந்திரத் தின பிரதான நிகழ்வின் போது தேசிய கீதம் தமிழிலும் பாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதத்தை பாட முடியுமெனவும் தமிழில் பாடுவதென்றால் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அனுமதியை பெற வேண்டுமெனவும் அந்த கட்சி அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.
இதன்படி தமிழில் பாடும் தீர்மானத்திற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments