நாட்டின் 68வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் இன்றைய தினம் நாடெங்கிலும் சிறைச்சாலைகளிலிருந்து 606 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இதன்படி 593 ஆண்களும் 13 பெண்களும் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறியளவிலான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சுதந்திரத் தினத்தையொட்டி சகல சிறைக் கைதிகளுக்கும் தமது உறவினர்களை சந்திப்பதற்கும் மற்றும் அவர்களுடன் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவுகளை உண்பதற்கும் அனுமதியளிக்கப்படவுள்ளது.


0 Comments