யாழ்ப்பாணம் பலாலி வீதியில் நண்பகல் பாரிய வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலருந்து புன்னாலைகட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை முந்திச்செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் தடம்மாறி பயணித்த குறித்த தனியார் பேரூந்து அங்கிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுடனும், மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மோதியுள்ளது. பேரூந்தின் அதிக வேகம் காரணமாக மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் அருகிலிருந்த தனியார் வங்கி கட்டடத்துடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் அருகில் இருந்த தனியார் வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரம் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதன் போது முச்சக்கரவண்டியை மோதித்தள்ளியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பயணித்த பாடசாலை மாணவன் கவலைக்கிடமான நிலையில் உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



0 Comments