மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர
வண்டியொன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று வேளையில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பனையறுப்பான், சித்திவிநாயகர் காளிகோவிலுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளதாகவும், காளிகோவிலின் பூசகரின் முச்சக்கர வண்டியே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

0 Comments