Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பட்டப்பகலில் கல்முனை நகரில் நிதிக் கம்பனியின் பெண் உதவி முகாமையாளர் வெட்டிக்கொலை

அம்பாறை மாவட்டம், கல்முனைப் பொலிஸ் பிரிவில் கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள சர்வோதய அபிவிருத்தி நிதிக் கம்பனியின் உதவி முகாமையாளரான பெண்ணொருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கும் 2.30 மணிக்குமிடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் மேலும் கூறினர்.
குளோரி வீதி நற்பிட்டிமுனை, கல்முனையைச் சேர்ந்த 7 வயதுப் பெண் குழந்தையின் தாயான ராஜேஸ்வரன் சுலக்ஷனா (வயது 33) என்பவரே கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
வழமை போன்று சனிக்கழமையும் காரியாலத்திற்pகுச் சென்று கடமையாற்றிக் கொண்டிருக்கும்போதே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது.
அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவருடன் கடமையிலிருந்த மற்றொரு வெளிக்கள உத்தியோகத்தர் பகல்போஷனத்திற்காக வெளியில் சென்று மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது இந்த உதவி முகாமையாளர் கழுத்து வெட்டப்பட்டு கீழே கிடப்பது கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments