பிற்பகல் புத்தளம் பிரதேசத்தில் வீசிய கடும் காற்றினால் 46 வீடுகள் சேதமடைந்துள்ளன.
புத்தளம் முள்ளிபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள 46 வீடுகளே சேதமடைந்ததாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மக்கள் புரம் , இல்யாஸ் தோட்டம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே கடும் காற்று வீசியுள்ளது .
கடும் காற்றினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகளை குறித்த பகுதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.


0 Comments