Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரிவிவ் தீமானத்தின் அவசியத்தை உணர்த்திய இலங்கை இந்திய ஆட்டம் இந்திய வீரர்களை விமர்சித்த ஸ்டீவ் வோ

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இறுதி T20 போட்டியில் நடுவர்களின் தீர்ப்பு என்னை ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

ஒருபோட்டித்தொடரை தீர்மானிக்கின்ற இறுதிப் போட்டியில் நடுவர்கள் தமது விரல்களை உயரத்திக்காட்டிக்கொண்டிருன்தது அருவருப்பாக இருந்தது. 

மைதானத்தில் உள்ள வீரர்கள் தவறு செய்தால் தண்டனை வழங்கலாம் நடுவர்கள் செய்யும் தவறுகளுக்கு உடன் அமுல்படுத்தக்கூடிய தண்டனைகள் எதுவுமில்லை . 

நடுவர்கள் எடுக்கும் தீர்மானங்களை சிந்தித்து எடுப்பதற்கு ரிவிவ் முறை நல்லதோர் எடுத்துக்காட்டாகும் அப்போதுதான் தான் பிழையாக வழங்கிய தீர்மானங்கள் சுட்டிக்காட்டப்படும் போது, அவர்கள் தனது பிழையை எண்ணி திருத்திக்கொள்வதோடு பல மில்லியன் கணக்கான பார்வையாளர்களின் முன் தான் அவமானப்பட நேரிடும் என எண்ணி கவனமாக இருப்பர். 

இவ்ரிவிவ் முறைக்கு முட்டுக்கட்டை போடுவது இந்திய அணியினராகும், அவ்வாறு முட்டுக்கட்டை போடுகின்றவர்கள் மைதானத்தில் நீதமாக நடந்து கொள்ள வேண்டும் நேற்றைய போட்டியில் மட்டையில் படாத பந்துக்களை ஆட்டமிழப்பு கோறரும்பொழுது சற்று சிந்தித்திருக்க வேண்டும் 

டோனி ஒருசிறந்த தலைவர் அவர்கூட நடுவர் ஆட்டமிழப்பு வழங்க வேண்டும் என்பதுபோல் நடந்துகொண்டது என்னை ஆச்சரியப்படுத்தியது , ஏனென்றால் துடுப்பாட்ட வீரரின் மட்டையில் பந்து பட்டிருந்தால் அது நன்றாக விக்கட் காப்பாளரான டோனிக்கு விளங்கி இருக்கும் என தனது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார்,

Post a Comment

0 Comments