Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஆயுதப் போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் குதித்தமைக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன! சித்தார்த்தன் எம்.பி

ஆயுதப் போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் குதித்தமைக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் புளொட் அமைப்பின் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாங்கள் தேர்­தலில் வெற்றி பெற வேண்டும் என்­ப­தற்­காக மக்­க­ளிடம் வந்­த­வர்­க­ளல்ல. மக்­க­ளுக்கு சேவை­யாற்ற வேண்டும் என்­ப­தற்­கா­கவே மக்கள் முன்­னி­லையில் வந்தோம். ஆயுதப் போராட்ட அர­சி­ய­லுக்குள் தமிழ் இளை­ஞர்கள் குதிப்­ப­தற்கு நியா­ய­மான கார­ணங்கள் அப்­போது இருந்­தன. அன்­றைய நிலை­மையை இப்­போது திரும்பிப் பார்க்­கும் ­போதும் அந்தக் கார­ணங்கள் சரி­யா­னவை என்றே தோன்­று­கின்­றது. அதில் சந்­தே­க­மில்லை. இப்­போது ஆயுதப் போராட்டம் முறி­ய­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. மீண்டும் ஆயுதப் போராட்ட அர­சி­ய­லுக்குள் போகக் கூடிய சூழல் இல்­லை­யென்­பதை ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளினால் நன்கு உண­ரப்­பட்­டி­ருக்­கின்­றது.
யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான இந்தக் காலப்­ப­கு­தியில் சாத்­வீகப் போராட்டத்தின் மூலமே பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்­டி­யுள்­ளது. ஆயுதப் போராட்டம் தீவி­ர­ம­டைந்­தி­ருந்த காலப்­ப­கு­தியில் எமது கட்­சி­யினர் மக்­க­ளோடு மக்­க­ளாக இருந்து சேவை­யாற்றி வந்­தார்கள். அப்­போது தேர்­தல்­களில் வேட்­பா­ளர்­களை நிறுத்­து­வ­தற்­காக மக்கள் மத்­தியில் இருந்தே நாங்கள் தகு­தி­யா­னர்­களைத் தெரிவு செய்தோம். ஆயினும் பின்னர் அப்­போது ஏற்­பட்­டி­ருந்த சூழலில் பொது­மக்கள் மத்­தியில் இருந்தும் வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்­வது கடி­ன­மான காரி­ய­மாக இருந்­தது. அர­சி­ய­லுக்குள் வரு­வ­தற்கு அவர்கள் அச்­ச­ம­டைந்­தி­ருந்­தார்கள். அப்போது தான் நாங்கள் எங்­க­ளு­டைய உறுப்­பி­னர்­களை வேட்­பா­ளர்­க­ளாக நிறுத்தி தேர்­தலில் மக்­களின் ஆத­ரவைப் பெற்று 3 பேரை பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­பி­யி­ருந்தோம்.
பின்னர் ஏற்­பட்ட சூழல் மாற்றம் கார­ண­மாக தேர்­தலில் மக்­களின் ஆத­ரவை நாங்கள் பெற முடி­யாமல் போயி­ருந்­தது. அதற்கு அன்­றி­ருந்த அர­சியல் சூழலே முக்­கிய கார­ண­மாகும். நீண்ட இடை­வெ­ளியின் பின்னர் வட மாகாண சபைக்கு என்­னையும் சேர்த்து 3 பேரை மக்கள் உறுப்­பி­னர்­க­ளாகத் தெரிவு செய்து அனுப்­பி­னார்கள். அதே­போன்று கிழக்கு மாகா­ணத்­திலும் ஒரு­வரை மக்கள் தெரிவு செய்­தார்கள். இப்­போது மீண்டும் என்னை மக்கள் பாராளு­மன்­றத்­திற்குத் தெரிவு செய்­துள்­ளார்கள்.
வவு­னி­யாவில் குறிப்­பாக வன்­னிப்­பி­ர­தே­சத்தில் என்னை மக்கள் தங்­க­ளுடைய பிர­தி­நி­தி­யாகத் தெரிவு செய்து பாராளு­மன்­றத்­திற்கு அனுப்­பி­யி­ருந்­தார்கள். தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இணைந்து நாங்கள் அர­சியல் செய்ய வேண்டும் என்ற பொது­மக்­க­ளு­டைய விருப்­பத்­தை­ய­டுத்து கடந்த முறை யாழ்ப்­பா­ணத்தில் மக்கள் என்னைத் தெரிவு செய்­துள்­ளார்கள். அந்த வகையில் வட­மா­கா­ணத்தில் வன்­னி­யிலும், யாழ்ப்­பா­ணத்­திலும் மக்­களின் பாராளு­மன்றப் பிர­தி­நி­தி­யாக என்னால் பணி­யாற்ற முடிந்­தி­ருக்­கின்­றது.
தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்ற அதேவேளை, எமது மக்­களின் அடிப்­படை அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றத்­தக்க வகை­யி­லான தீர்வு ஒன்றை எட்ட வேண்டும் என்­ப­தற்­காக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு செயற்­பட்டு வரு­கின்­றது.
அர­சியல் தீர்வு கண்டால் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணப்­பட்டு விடும். ஆகவே, ஏனைய பிரச்­சி­னை­களில் ஏன் கவனம் செலுத்­து­கின்­றீர்கள் என கேட்­ப­வர்­களும் இருக்­கின்­றார்கள். அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதும், அர­சியல் தீர்வு காண்­பதும் சமாந்­தர முயற்சிக­ளாக மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.
இந்த வகை­யி­லேயே புதிய அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் கொண்டுவரு­வதனூடாக ஓர் அர­சியல் தீர்வை எட்­டி­விட வேண்டும் என்­ப­தற்­கான முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த சந்­தர்ப்­பத்தில் ஓர் அர­சியல் தீர்வைக் காண முடியும் என்று கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் திட­மாக நம்­பு­கின்றார். அதே­போன்று மக்­க­ளி­டமும் அந்த நம்­பிக்கை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.
இந்தச் சூழலில் தமிழ்த்தேசிய கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்­கின்ற நான்கு கட்­சி­களும் ஒற்­று­மை­யாக அர­சியல் ரீதி­யாக அர்த்­த­புஷ்­டி­யுள்ள வகையில் செயற்­பட வேண்டும். தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்­சி­க­ளுக்­குள்­ளேயே தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக கட்சி மாறு­கின்ற நட­வ­டிக்­கை­க­ளுக்குக் கட்சித் தலை­மைகள் இடம் கொடுக்கக் கூடாது.
சரியோ, பிழையோ இந்த அழிவுகளுக்கு எல்லாம் நாங்களும் ஒரு காரணமாக இருக்கின்றோம். இந்த போராட்டத்தை ஆரம்பித்த ஒவ்வொருவரும் இந்த அழிவுகளுக்கு காரணமானவர்கள் தான். யுத்தம் கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள அழி­வு­க­ளுக்கும், அர­சியல் நிலை­மை­க­ளுக்கும் அன்று ஆயுதப் போராட்ட அர­சி­யலில் ஈடு­பட்டு இன்று உயிர் தப்­பி­யுள்­ள­வர்­களும் பொறுப்பு கூறக் கட­மைப்­பட்­டுள்­ளார்கள். ஆயுதப் போராட்ட அர­சி­யலில் ஈடு­பட்­ட­மைக்குக் கார­ணங்கள் இருந்­தன. ஆனால் இயக்­கங்­க­ளி­டையே ஏற்பட்ட மோதல்கள் அழி­வு­க­ளையே ஏற்­ப­டு­த்­தி­யி­ருந்­தன. உலகின் ஏனைய நாடு­களில் இடம்­பெற்ற ஆயுதப் போராட்ட அர­சி­ய­லிலும், இத்­த­கைய இயக்க மோதல்கள் இருக்­கத் தான் செய்­தன. ஆயினும் தலைவர்கள் மட்­டத்தில் அந்தப் பிணக்­கு­க­ளுக்குத் தீர்வு காணப்­பட்டு பின்னர் அவர்கள் ஒற்­று­மை­யாகப் போரா­டி­யி­ருக்­கின்­றார்கள்.
எனவே, இயக்க மோதல்கள் என்­பது இலங்­கையில் மாத்­திரம் நிகழ்ந்­த­தல்ல. ஆனாலும், அவற்­றுக்குத் தலை­வர்கள் மட்­டத்தில் தீர்வு காண முடி­யாமல் போனது துர­தி­ர்ஷ்­ட­மாகும். ஆயுதப் போராட்ட அர­சியல் முடி­வுக்கு வந்­ததன் பின்னர், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பே தமிழ் மக்­களின் செல்­வாக்குள்ள அர­சியல் தலை­மை­யாக இருக்­கின்­றது. அதே­போன்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவராகிய சம்பந்தனை மக்கள் மதிக்கின்றார்கள். சர்வதேசமும் மதிக்கின்றது. முக்கியமாக அரசாங்கமும் அவர் மீது அதிக மதிப்பு வைத்திருக்கின்றது.
ஆகவே, அவருடைய தலைமையைப் பலப்படுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நான்கு கட்சிகளும் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அரசியல் தீர்வு காண்பதற்கும் ஆக்கபூர்வமான முறையில் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படத் தவறினால், அடுத்த தலைமுறையின் பழிச் சொல்லுக்கு நாங்கள் ஆளாக நேரிடும் என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments