எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்கள் தமது விண்ணப்பங்களை இன்று முதலாம் திகதி முதல் அனுப்பி வைக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சார்த்திகள் தமது பாடசாலை அதிபர்களினூடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட ரீதியிலும் இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.ஏ.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
பாடசாலை பரீட்சாரத்திகளுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி அவர்கள் விண்ணப்பிக்க முடியுமெனவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இன்றைய தினம் தேசிய பத்திரிகையில் வெளியாகியுள்ள அறிவுறுத்தல்களுடான விண்ணப்பங்களை அடிப்படையாக கொண்டு அல்லது www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்க முடியுமெனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments