இராஜகிரியவிலுள்ள பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்திலுள்ள மண்ணை அகற்றி அதில் தங்கம் ஏதும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என நேற்று காலை முதல் தேடுதல் நடத்திய போதும் அதிலிருந்து தங்கமோ அல்லது வேறு எந்த பொருட்களோ மீட்கப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 அடி முதல் 2 அடி வரையான ஆழமும் 30 அடி நீளமும் கொண்ட குறித்த நீச்சல் தடாகம் முழுமையாக மண்ணால் மூடப்பட்டுள்ள நிலையில் நேற்று காலை 10 மணி முதல் அதிலுள்ள மண்ணை அகற்றும் நவடிக்கைகள் முன்னொடுக்கப்பட்டது. ஆனால் உள்ளேயிருந்து எந்த பொருட்களும் மீட்கப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்கொண்டு மூடப்பட்டிருந்த குறித்த நீச்சல் தடாகத்திற்குள் மஹிந்தவின் தங்கம் மற்றும் பணம் பொலித்தீன் பையொன்றில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில வாரங்களாக சில ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அது தொடர்பாக அந்த மாளிகையின் உரிமையாளரான லியனகே பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய நேற்றை தினம் அந்த நீச்சல் தடாகத்திலுள்ள மண்ணை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments