Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு விழா - 2016

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று வெள்ளிகிழமை (29.01.2016) பிற்பகல் 02.00 மணியளவில் இப்பாடசாலையின் சிசிலியா விளையாட்டரங்கில் பாடசாலையின் முதல்வர் அருட்சகோதரி. அருட்மரியா தலைமையில் கோலகாலமான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமாகிய திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களும், மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன், மட்டக்களப்பு நகர ஹட்டன் நெசனல் வங்கியின் சிரேஸ்ட முகாமையாளர் பி.ரமணதாச ஆகியோர்கள் அழைப்பு அதிதிகளாகவும் மற்றும் பிரதி அதிபர் எம்.சுந்தரலிங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், டபிள்யு.ஜெ.பி.ஜெயராஜா ஆகியோர்கள் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பெண்களுக்கான கிரிகெட் சுற்றுப்போட்டி, எல்லைப்போட்டி, ஈட்டி எறிதல், பரிதி வட்டம் வீசுதல், குண்டெறிதல், உயரம் பாய்தல், வினோதஉடை போட்டி, நீளம் பாய்தல், பெற்றோர்களுக்கான நிகழ்ச்சி உட்பட பல்வேறுபட்ட இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இவ்விளையாட்டுபோட்டியில் கசில்டா, பிறிடா, கொன்சிலியா, மாறி என நான்கு இல்லங்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் கசில்டா இல்லத்தினர் 650 புள்ளிகள் பெற்று முதலாம் இடத்தினையும், பிறிடா இல்லம் 605 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், மாறி இல்லம் 554 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும், கொன்சிலியா 535 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தினை தட்டிக்கொண்டது. இப்போட்டியில் பங்குபற்றிய சகல மாணவிகளுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும், வெற்றி கேடயங்களும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் மற்றும் கோட்டைக்கல்வி அதிகாரி சுகுமாரன் உட்பட பலர் வழங்கி வைத்தனர்.  சிறந்த அணி நடையாக கொன்சிலியா இல்லம் முதலாம் இடத்தினையும், கசில்டா இல்லம் இரண்டாம் இடத்தினையும், ஏனைய இரண்டு இல்லங்களும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டனர்.










Post a Comment

0 Comments