கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது நகரில் இன்று நண்பகல் ஆயுதக் கொள்கலன் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாய்ந்தமருது அல் அமானா வீதியிலுள்ள காணி ஒன்றில் மலசல கூடம் அமைப்பதற்கான குழியொன்றைத் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களால் இந்த ஆயுதங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற புலனாய்வுப் பொலிஸாரும் கல்முனை பெருங்குற்றப் பிரிவுப் பொலிஸாரும் இணைந்து ஆயுதக் கொள்கலனை மீட்டுள்ளனர்.
அதிலிருந்து கைக்குண்டு ஒன்றும், ரீ-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் ரவைகள் 32, ரீ 84 எஸ் ரவைகள் 44, எஸ்எல்ஆர் துப்பாக்கி ரவைகள் 9, ஒன்பது மில்லி மீற்றர் துப்பாக்கி ரவைகள் 9, 38 றிவோல்வர் ரக துப்பாக்கி ரவைகள் 9 ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அம்பாறை புலனாய்வுப் பொலிஸாரும் கல்முனை பெருங்குற்றப் பிரிவு பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments