Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு நாவற்குடாவில் பொதுச்சுகாதார பரிசோதகரின் வீட்டின் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் பொதுச்சுகாதார பரிசோதகரின் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று இரவு 11.00மணியளவில் நாவற்குடா,மேல்மாடி வீதியில் உள்ள கல்லடி பொதுச்சுகாதார பரிசோதகர் ஜெயசங்கரின் வீட்டின் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டின் முன்பாக இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்புச்சத்தம் ஒன்று கேட்டு வெளியே வந்து பார்த்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளும் எரிந்துகொண்டிருப்பதை கண்டதாக பொதுச்சுகாதார பரிசோதகரின் மனைவி தெரிவித்தார்.
ஸ்தலத்துக்கு விரைந்துள்ள காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


Post a Comment

0 Comments