Home » » ஜோசெப்பை தாமே கொன்றதாக சிந்துஜன் என்னிடம் சொன்னார்: பொலிஸ் அதிகாரி பரபரப்பு சாட்சியம்

ஜோசெப்பை தாமே கொன்றதாக சிந்துஜன் என்னிடம் சொன்னார்: பொலிஸ் அதிகாரி பரபரப்பு சாட்சியம்

மட்­டக்­க­ளப்பு மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தை தாங்­களே கொலை செய்­த­தாக கருணா அணியின் பிர­பல உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான சிந்­துஜன் தன்­னிடம் தெரி­வித்­த­தாக ஜனா­தி­பதி பாது­காப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்­ட­பிளும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி ராஜ் கொலை வழக்கின் அரச சாட்­சி­யா­ள­ரு­மான விஜய விக்­ரம மனம்­பே­ரிகே சம்பத் பிரீத்­தி­விராஜ் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.
ரவிராஜ் கொலை விவ­காரம் தொடர்பில் நேற்று முன் தினம் கொழும்பு மேல­திக நீதிவான் திலின கமகே முன்­னி­லையில் இடம்­பெற்ற சாட்சி குறுக்கு விசா­ர­ணை­களின் போதே அவர் இவ்­வாறு சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.
அத்­துடன் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் கொலை தொடர்­பி­லான மேல­திக தக­வல்­களின் பின்­னணி தொடர்பில் கருணா அணியின் தலைவர்­களில் ஒரு­வ­ராக கரு­தப்­படும் இனிய பார­தியே அறிந்­தி­ருப்­ப­தாக சிந்­துஜன் தன்­னிடம் தெரி­வித்­த­தா­கவும் விஜய விக்­ரம மனம்­பே­ரிகே சம்பத் பிரீத்­தி­விராஜ் மன்றில் தெரி­வித்தார். இந்த சாட்­சி­யத்தின் போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
“நான் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ராக 1996.01.09 அன்று உப சேவைகள் பிரி­வூ­டாக உள்­வாங்­கப்பட்டேன். 2003 முதல் 2005 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­வரை அப்­போ­தைய கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நெவில் விஜே­சிங்­கவின் கீழ் நான் கட­மை­யாற்­றினேன். பின்னர் 2005 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் 2005 ஆம் ஆண்டு இறுதி வரை கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இருந்த ரொஹான் அபே குண­வர்­த­னவின் கீழ் கட­மை­யாற்­றினேன்.
அக்­கா­லப்­ப­கு­தியில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அப்­போது கிழக்கின் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தள­ப­தி­யாக கட­மை­யாற்­றிய கருணா அம்­மா­னுடன் தொடர்­பு­களைப் பேணினார். அதற்­க­மை­வாக பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் மட்­டக்­க­ளப்பு மற்றும் அம்­பாறை உத்­தி­யோ­க­பூர்வ இல்­லங்­க­ளுக்கு அவரை சந்­திக்க, பிள்­ளையான், சிந்­துஜன், சீலன், கார்த்­தீபன் அல்­லது புஷ்­ப­குமார், ராஜா ஆகியோர் வந்து சென்­றனர். இதன் போது அவர்­க­ளுடன் எனக்கு தொடர்பு ஏற்­பட்­டது. அதன் படி அவர்­க­ளுடன் சென்று தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் அர­சியல் காரி­யா­ல­யங்­களை தாக்க எனக்கு வழங்­கப்­பட்ட ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக நான் அவர்­க­ளுடன் சென்று அதனை மேற்­கொண்­டுள்ளேன். மட்­டக்­க­ளப்பு புலி­களின் காவ­லரண் ஒன்றின் மீது தாக்­குதல் நடத்த நான் வெலிக்­கந்­த­வுக்கு சென்று கருணா அணியின் இரு குழுக்­களை அழைத்து வந்தேன். பின்னர் அவர்­க­ளுடன் சேர்ந்து தாக்­கு­தலும் நடத்­தினேன்.
இந் நிலையில் தான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம் தான் உள்­ளிட்ட குழு­வி­ன­ரா­லேயே கொல்­லப்­பட்­ட­தாக கருணா அணியின் பிர­பல உறுப்­பினர் சிந்­துஜன் என்­னிடம் தெரி­வித்தார். அந்த கொலை தொடர்பில் மேல­திக விப­ரங்­களை கருணா அணியின் கிழக்குத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான இனிய பாரதி என்­பவர் முழு­மை­யாக அறிந்­தி­ருப்­ப­தாக அவர் என்­னிடம் தெரி­வித்தார். 2008 ஆம் ஆண்டு பொலி­ஸா­ருக்கு ரவிராஜ் கொலை தொடர்பில் நான் வாக்குமூலம் வழங்­கிய போதும் அதில் உண்மையான தக­வல்­களை மறைத்தே வழங்­கினேன்.
உண்­மையைக் கூறினால் உயி­ருக்கு அச்­சு­றுத்தல் ஏற்­படும் என்றே நான் உன்­மை­களை மறைத்தேன். ஆனால் இப்­போது அவ்­வாறு அச்­ச­ம­டைய வேண்­டி­ய­தில்லை. அத­னா­லேயே இப்­போது உண்­மையைக் கூறு­கின்றேன். என சாட்­சியம் அளித்தார்.
இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நத்தார் ஆரா­த­னை­களில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த போது சுட்­டுக்­கொல்­லப்­பட்ட பர­ரா­ஜ­சிங்­கத்தின் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வரும் நிலையில் அதற்காகவேண்டி பிள்ளையானும் கைது செய்யப்பட்டுள்ளார். இந் நிலையிலேயே நேற்று முன்தினம் ரவிராஜ் வழக்கில் பிரதிவாதிகள் சட்டத்தரணிகளின் குறுக்கு விசாரணையின் போது பரராஜசிங்கம் கொலை தொடர்பிலான சாட்சிகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |