Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஐ.எஸ். தீவிரவாதிகளின் கருவூலத்தை தாக்கி அழித்த அமெரிக்க போர் விமானங்கள்: கோடிக்கணக்கான பணம் தீக்கிரை

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பணம் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கருவூலத்தை அமெரிக்க போர் விமானங்கள் தாக்கி அழித்ததாகவும் இந்த தாக்குதலில் கோடிக்கணக்கான பணம் தீக்கிரையானதாகவும் தெரியவந்துள்ளது.
ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் அவர்கள் பணத்தை சேகரித்து வைத்துள்ள பாதுகாப்பு நிறைந்த கருவூலம் ஒன்றும் இயங்கி வருகின்றது. உலகம் முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் கைக்கூலிகள் மற்றும் ஐ.எஸ். படையில் சேரும் வெளிநாட்டினர்களுக்கு இங்கிருந்துதான் பணபட்டுவாடா நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இந்த கருவூலத்தின்மீது தாக்குதல் நடத்தி அழித்துவிட்டால் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிதிசார்ந்த இயக்கத்தை முடக்கி விடலாம் என கருதப்பட்டுவந்த நிலையில், அமெரிக்க விமானப்படைகள் நேற்று அந்த இடத்தின்மீது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தின. இரண்டாயிரம் பவுண்டுகள் எடைகொண்ட இரண்டு குண்டுகள் அந்த இடத்தின்மீது வீசப்பட்டதாகவும், இதில் அந்த கருவூலம் தகர்ந்து, தரைமட்டமானதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
அங்கு வைக்கப்பட்டிருந்த மொத்தப் பணமும் தீயில் எரிந்து சாம்பலானதாக தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகள், அழிக்கப்பட்டது எந்த நாட்டுப்பணம்? அழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? என்பதை மதிப்பிட முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments