Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சாதாரண தரப் பரீட்சைக்கான புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்த தீர்மானம்

அடுத்த வருடம் முதல் சாதாரண தரப் பரீட்சைக்கான புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு  தேசிய கல்வி நிறுவகம் தீர்மானித்துள்ளது.
இதற்கான புதிய பாடநெறிகளை ஒழுங்கு செய்துள்ளதாக நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றுவதற்காக கட்டாயப்படுத்தப்பட்ட பாடங்கள் தொடர்பிலும் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யப்படும் பாடங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை 9 இலிருந்து 6 அல்லது 7 வரை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களின் நன்மை கருதியே இவ்வாறான தீர்மானங்களை எடுத்ததாகவும் தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments