அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இன்று திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 5 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று மதியம் 1.45 மணியளவில் குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவல் ஏற்பட்டுள்ள பகுதியில் இலங்கையின் நீளமான புகையிரத சுரங்கப்பாதை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.குறித்த பகுதிக்கு யாராவது தீ மூட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அட்டன் பொலிஸார் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.இந்த தீ விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments