கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமான பரவும் அபாயம் நிலவுவதாகவும் இதனால் நுளம்புகள் தொடர்பாக அவதானமாக செயற்படுமாறும் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் மொத்தம் 3,118 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இதில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1,042 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதான அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி மேல் மாகாணத்தில் அவதானம் ஏற்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுகளில் எதிர்வரும 28 ஆம் திகதி முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சூழலில் காணப்படும் நுளம்பு பெருக்க்கூடிய இடங்களை கண்டறிந்து அவற்றை அழிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
0 Comments