Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

யுத்தமும், சுனாமியும் என் குடும்பத்தை விட்டு வைக்கவில்லை: வாகரை கதிரவெளி கிராமத்தைச் சேர்ந்த சாதனை மாணவி

நாட்டில் நடைபெற்ற அழிவுகள் கூட என் குடும்பத்தை விட்டு வைக்கவில்லை என 2015ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் மட்டு மாவட்டத்தில் 6ஆவது இடத்தைப் பெற்று சாதனை படைத்த மாணவி கோபாலப்பிள்ளை உஷாந்தினி தெரிவித்துள்ளார்.
வாகரை கதிரவெளி கிராமத்தைச் சேர்ந்த இவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
தனது தந்தை யுத்தத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பண உதவி இல்லாமையால் ஆறு வருடங்களாக நோயினால் இறந்து விட்டார்.
யுத்தம் காரணமாக பல தடவை வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றோம். அகதியாக முகாம்களில் தங்கியிருந்து எங்களின் உயிரை காப்பாற்றிக் கொண்டோம்.
அதன் பின் சுனாமியால், உயிரை காப்பாற்ற ஓடினோம். இவ்வாறு பல பாதிப்புகளுக்கு மத்தியில் எங்களின் கிராமமும், என் குடும்பமும் இருக்கின்றது.
இவற்றுக்கு மத்தியில் மூன்று பிள்ளைகளையும், வீதி புனரமைப்புக்கு கல்பொறுக்கி கூலி தொழில் செய்து என்னுடைய அம்மா எங்களை படிக்கவைத்தார்.
இந்த நிலையில் கல்வி மூலம் எனது கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளேன்.
இத்தனை முயற்சிக்கும் எனது அம்மாவின் விடாத உழைப்பு மற்றும் அவரின் அரவணைப்பும் தான் காரணம். என்னுடைய படிப்பு தொடர வாழைச்சேனையில் உறவினர் வீட்டில் வைத்து படிக்க வைத்தார்.
நான் எதிர் காலத்தில் எனது பட்டப்படிப்பை முடித்ததும் கிராமத்தில் காணப்படும் கல்விக்கான குறைபாடுகளை என்னால் இயன்றளவு நிவர்த்தி செய்வேன். அது என் கடமையாகும்.
எனது அம்மாவும் நோயால் பாதிக்கப்பட்டவர், எங்களின் படிப்புக்காக அண்ணாவும் அவருடைய படிப்பை இடை நிறுத்திவிட்டார்.
எமது உறவுகளே! என்னுடைய வீட்டின் நிலையை எனது பதிவில் உங்களுக்காக பதிவு செய்துள்ளேன்.
இயன்றளவு என் பல்கலைக்கழக படிப்புக்கு உதவிகள் செய்தால் மிகவும் நன்றி உடையவர்களாக என்றும் இருப்போம் என்பதை கேட்டுக்கொள்கின்றேன். என உஷாந்தினி தன்னுடைய குடும்ப நிலையைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பு:
இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவான வடக்குக் கிழக்கைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு உதவ விரும்பும் உள்ளங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஊடாக உங்கள் உதவிகளை வழங்க முடியும்.
அவ்வாறு உதவும் உள்ளங்கள் ஊடாக வழங்கப்படும் உதவிகள் அனைத்தும்,  குறிப்பாக 120 வறிய மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகி இருந்தால் மொத்த நிதியில் இருந்து சமமாக பங்கீடு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கின்றோம்.
அத்துடன் உங்களால் வழங்கப்படும் உதவிகள் தொடர்பான விபரம் முழுமையாக வெளிப்படுத்தப்படும்.
தொடர்புகளுக்கு
Name : Federation of Young Men’s Hindu Association, Batticaloa district.
Bank : Commercial Bank Batticaloa
Account number : 1105040264.
SWIFT CODE : CCEYLKLX,
Bank Code : 7056-105
0094776034559, 0094652228018

Post a Comment

0 Comments