கடந்த வருடத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2750 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி போக்குவரத்து பாதுகாப்பு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஜனவரி 1ம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதி வரையான காலப்பகுதியில் நாடுபுரூகவும் 2561 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 2750 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் அதிகமானவர்கள் மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் போது ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் 2015ஆம் ஆண்டிலேயே மோட்டார் சைக்கிள்கள் மூலம் ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments