எகிப்து நாட்டில் நைல் நதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளதில் அதில் பயணம் செய்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான படகு கப்ர் எல்-ஷெர் ஷெயிக் மற்றும் பெஹிர ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபட்டு வந்தது.
தலைநகர் காய்ரோவின் வடக்கு பகுதியில் இருந்து 1470 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கப்ர் எல்-ஷெய்க் மாகாணத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. படகில் சுமார் 22 பேர் பயணம் செய்ததாக எகிப்து அரசு தெரிவித்துள்ளது.
தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் விரைந்துசென்று விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் விரைந்துசென்று விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற படகு விபத்தில் 31 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments