கடந்த வருடத்தில் நவம்பர் மாதம் வரையான 11 மாத காலப்பகுதியில் 447 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த செப்டம்பர் வரையான 9 மாத காலப்பகுதியில் 2375 தற்கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவங்களில் அதிகமானவை இடம்பெற்றமைக்கான காரணங்கள் கண்டறியப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று கொழும்பில் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments