மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு நாட்களாய் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், புதன்கிழமை காலை 8.30 மணிமுதல் இன்று வியாழன் காலை 8.30 மணிவரையான 24 மணிநேரத்தில் மாத்திரம் 250 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாகமாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.
தொடராக பெய்துவரும் அடை மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் வீதிகளில் வெள்ளம் பாய்வதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளததக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், காத்தான்குடி ஏறாவூர் மட்டக்களப்பு ஆரையம்பதி வாகரை உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளில் கடும் மழை பெய்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சீரற்ற காலநிலை காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இரு தினங்கள் இடைநிறுத்தப்படுவதாக பதில் பதிவாளர் அ.பகிரதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாக விடுதியில் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக இன்று வியாழன் மற்றும் நாளை வெளிக்கிழமை கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
சீரற்ற காலநிலை தொடரும் பட்சத்தில் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்படுவது தொடர்பாக மாணவர்களுக்கு திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிபிட்டார்.








0 Comments