“இப்போது கர்ப்பம் அடையாதீர்கள்” என்று பிரேசில் நாட்டு சுகாதார அதிகாரிகள் விசித்திரமான ஒரு ஆலோசனையை அந்நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
நுளம்பு மூலம் பரப்பப்படும் வைரஸ் காரணமாக புதிதாக பிறக்கின்ற குழந்தைகளில் ஏற்படும் மைகுரோசிபாலி ( Microcephaly ) என்ற நோய் மூளையின் வளர்ச்சியை பாதிக்கின்றமையே இதற்கு காரணமாகும்.
” இது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் , இப்போதைக்கு உள்ள நிச்சயம் அற்ற சூழ்நிலையில் எதிர்கால தம்பதிகள் தாம் பெற்றோர் ஆகும் திட்ட்டத்தை தள்ளிப் போடுவதே நல்லது என்பது எமது ஆலோசனையாகும்.” என்று அஞ்சலா ரோச்சா என்ற மருத்துவ நிபுணர் தெரிவித்தார்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டதாக இவ்வருடம் 2400 பதிவுகள் பிரேசிலில் செய்யப்பட்டுள்ளன. கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 147 மட்டுமே. இந்த நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகள் (கர்ப்பத்தில்) சிறிய தலையுடன் பிரப்பதுடன், மூளையின் விருத்தி குறைந்து காணப்படுவதுடன் விரைவில் மரணமும் சம்பவிக்கிறது.
0 Comments