மாத்தறை பகுதியில் நில்வலா கங்கையில் தாயும் மகளும் பாய்ந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் கடற்படையின் சுழியோடிகளின் உதவியுடன் அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை இவர்கள் இருவரும் பாய்ந்துள்ளதாக வெளியான தகவலையடுத்தே பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை அவர்கள் இருவரும் ஆற்றில் பாய்ந்ததாக தெரிவிக்கப்படும் இடத்திற்கு அருகிலிருந்து பயணப்பொதியொன்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாய்ந்த இருவரும் யார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments