Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பால் மக்கள் சிரமம்

வரவு-செலவுத் திட்டத்தில் வைத்திய அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு மற்றும் வாகன வரிச் சலுகை வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் நடைபெறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக வைத்தியசாலை செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன.
இதன்போது, அவசர சிகிச்சைப் பிரிவை தவிர வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு, கிளினிக்குகள் உள்ளிட்ட பிரிவுகள் இயங்கவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்துவந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
முன்னறிவித்தல்கள் எதுவும் இன்றி இவ்வாறு போராட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் பொதுமக்கள் விசனத்தினையும் வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments