ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லை அருகில் உள்ள மலைப்பிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம்களின் படங்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படங்களில் நவீன ஆயுதங்களை ஏந்தி முகமூடி 40 பயங்கரவாதிகள் பயங்கரவாதிகள் பயிற்சி எடுக்கும் காட்சியும் அவர்களின் பின்னால் ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பின் கொடி பறக்கவிடப்பட்டிருப்பதும் தெரிகின்றன.
இந்த படங்கள் பயங்கரவாதிகளினால் ட்விட்டர் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த படங்கள் பயங்கரவாதிகளினால் ட்விட்டர் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இவ்வாறு மூன்று முகாம்கள் இருப்பதாகவும் ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பு கூறியுள்ளது.
இந்த பகுதிகளில் செயற்பட்டு வரும் சில தீவிரவாத அமைப்புக்கள் ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்புக்கான தமது விசுவாசத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன. ஆனால் ஆப்கானிஸ்தானில் ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பின் பிரசன்னத்தை தலிபான் அமைப்பு எதிர்க்கிறது. இவர்களை காட்டிக்கொடுப்பவர்கள் என்றும் தமது பகுதிகளில் பிழையான முறையில் நுழைந்திருப்பவர்கள் என்றும் தலிபான் கருதுகிறது.
ஆனால் ஆப்கானிஸ்தானின் தென் மாநிலமான நன்ககாரில் ஐ. எஸ் ஐ. எஸ் அமைப்பின் வலுவான பிரசன்னம் காணப்படுகிறது. ஏனைய இடங்களை கைப்பற்றும் இவர்களின் முயற்சி தலிபான் அமைப்பினால் முறியடிக்கப்பட்டிருக்கிறது.
தலிபான் அமைப்புக்கும் ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்புக்கும் இடையிலான மோதல் ஆப்கானிஸ்தானின் தேசிய அரசாங்கத்துக்கு சாதகமான ஒரு விடயம். ஆனாலும், ஐ. எஸ். ஐ. எஸ் இன் ஊடுருவலை தேசிய அரசாங்கத்தின் படைகளால் தடுக்க முடியவில்லை.
ஆப்கானிஸ்தானில் தலிபானுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டு படைகள் அந் நாட்டின் பாதுகாப்பை தேசிய அரசாங்கத்தின் பொறுப்பில் விட்டுவிட்டு முழுமையாக வெளியேறி உள்ளநிலையில் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பான ஒரு நாடாக மாறியிருக்கிறது.





0 Comments