Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சம்மாந்துறையில் விபத்து: வயோதிபர் மரணம்

மாட்டு வண்டியில் சென்ற வயோதிபர் லொறி மோதியதில் அந்த இடத்திலே பலியாகியுள்ள சம்பவம் இன்று அதிகாலை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் நடைபெற்றுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது. இன்று அதிகாலை சம்மாந்துறை 62 வயதினை உடைய வயோதிபர் ஒருவர் வயலுக்கு போவதற்காக பிரதான வீதியால் சென்று கொண்டிருந்தபோது மணல் ஏற்றி வந்த லொறி மாட்டு வண்டியின் பின்பக்கமாகச்சென்று மோதியதால் மாட்டு வண்டில் செலுத்தி வந்த வயோதிபர் அந்த இடத்திலே பலியாகியுள்ளார்.
மாட்டு வண்டி முற்றாக சேதமுற்றுள்ளதுடன் லொறியும் சேதத்திற்குள்ளாகியுள்ளதோடு லொறியை ஓட்டிவந்த சாரதியை பொலிசார் கைது செய்துள்ளார்கள் இதுதொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
சம்மாந்துறையில் கோர விபத்து ஒருவர் பலி!
அம்பாறை சம்மாந்துறை வங்களாவடிச்சந்தியில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று  அதிகாலை 5.30மணியளவில் சம்மாந்துறை- அம்பாறை பிரதான வீதியிலுள்ள பங்களாவடியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வண்டிலை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ஆதம்பாவா தங்கராசா ஸ்தலத்திலேயே பலியானார்.
இவருக்கு வயது 67. இவர் சம்மாந்துறை விளினயடி மலையடி வீதியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையாராவார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments