Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்று முதல் மேலும் சில வீதிகளில் சாலை ஒழுங்கு அமுல் ஆரம்பம்

மேலும் சில வீதிகளுக்கு இன்று முதல் சாலை ஒழுங்குகளை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி இதுவரை பரிச்சார்த்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட டுப்ளிகேன் வீதி, பௌத்தாலோக மாவத்தை மற்றும் ஹைலெவல் வீதியின் நுகேகொடை தொடக்கம் கொழும்பு வரையான வீதிகளில் இந்த சாலை ஒழுங்குகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பாதைகளுக்கு மேலதிக பொலிஸ் அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது கொழுப்புக்குள் பிரவேசிக்கும் பிரதான வீதிகளான பாராளுமன்ற வீதி மற்றும் ஹெலெவல் வீதியின் கிருளப்பனை தொடக்கம் கொழும்பு வரை இந்த சாலை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments