Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சர்வதேச ஆசிரியர் தினம் என்பன பாடசாலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இன்று பாடசாலையின் அதிபர் வி.நல்லதம்பி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சா.வியாளேந்திரன், ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன்,
அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம், வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் மற்றும் மதகுருமார்கள், பிரமுகர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது 2014ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா மற்றும் 2015ம் ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் தினம் என்பன இடம்பெற்ற வேளை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அதிதிகளால் மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு சாதாரண தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சா.வியாளேந்திரன், ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுப் படிகம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments