Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இறக்குமதி செய்யப்படும் பழைய பஸ்களுக்கு 25 லட்சம் ரூபா வரையில் வரி அறவீடு

இறக்குமதி செய்யப்படும் பழைய பஸ்களுக்கு 25 லட்சம் ரூபா வரையில் வரி அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிநாடுகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட பஸ்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யும் போது 15 முதல் 25 லட்சம் ரூபா வரையில் வரி அறவீடு செய்யும் புதிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் இது பற்றிய பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
மோட்டார் வாகன விசேட வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யும் யோசனை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறு வரி அறவீடு செய்யப்படுவதனால் தமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
எனினும் சுற்றுலாத்துறைச் சார்ந்த நிறுவனங்கள் பஸ்களை இறக்குமதி செய்யும் போது அந்த நிறுவனங்களை பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments