Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரச பணியாளர்களுக்கான வாகன தீர்வை! அரசாங்கத்துக்கு 14.3 பில்லியன் ரூபா நட்டம்

அரச பணியாளர்களுக்கு தீர்வையற்ற வாகன அனுமதி உரித்துக்களை வழங்கியமை காரணமாக 2012ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்துக்கு 14.3 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் அரச பணியாளர்களுக்கு 32 ஆயிரம் தீர்வையற்ற வாகன அனுமதி உரித்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஏனைய இறக்குமதி வாகனங்களின் தீர்வைகளின் மூலம் 2012ஆம் ஆண்டு முதல் 63.8 பில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
தரவுகளின்படி 2013 ஆம் ஆண்டு 11622 தீர்வையற்ற வாகன உரித்து பத்திரங்கள் வழங்கப்பட்டன. 2012ஆம் ஆண்டு 7482 உரித்துக்கள் வழங்கப்பட்டன. 2014ஆம் ஆண்டு 6329 உரித்துக்களும் இந்த வருட ஆகஸ்ட் வரை 6854 தீர்வையற்ற வாகன உரித்துக்களும் வழங்கப்பட்டுள்ளன.
சிரேஸ்ட அரச பணியாளர் ஒருவருக்கு 27 ஆயிரத்து 500 டொலர்கள் பெறுமதியான தீர்வையற்ற வாகன அனுமதி உரித்துக்கள் வழங்கப்படுகின்றன

Post a Comment

0 Comments