Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

முரளிதரன், வார்னே சாதனை முறியடிப்பு: 105 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வின் நிகழ்த்திய சாதனை

முதல் இன்னிங்சில் 51 ஓட்டங்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த சாதனை படைத்துள்ளார்.
முன்னாள் இந்திய வீரர்கள் எரபல்லி பிரசன்னா மற்றும் அனில் கும்ளே ஆகியோர் இந்த சாதனையை 34 டெஸ்ட் போட்டிகளில் செய்திருந்தனர். தற்போது இவர்களது சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்.
மேலும், உலக அளவில் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான்களான அவுஸ்திரேலியாவின் ஷேவ் வார்னே, இலங்கையின் முத்தையா முரளிதரன் ஆகியோர் சாதனைகளையும் முறியடித்துள்ளார்.
இவர்கள் முறையே 31 மற்றும் 36வது டெஸ்ட் போட்டிகளில் தான் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
அதுமட்டுமல்லாது, தொடக்க பந்துவீச்சாளராக களமிறங்கி 50 விக்கெட்டுகளை சாய்த்தவர் என்ற சாதனையை 105 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தியுள்ளார் அஸ்வின்.
இதற்கு முன்பாக இங்கிலாந்து அணியை சேர்ந்த கொலின் பிலைத் என்ற வீரர் 1902-1910ம் ஆண்டு காலத்தில் விளையாடி 13 டெஸ்ட் போட்டிகளில் தொடக்க பந்து வீச்சாளராக பந்துவீசி 50 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Post a Comment

0 Comments