எகிப்தின் வான் பரப்பில் வெடித்துச் சிதறிய ரஷ்ய பயணிகள் விமானத்தில் பலியான 10 வயது டரினா குரமோவா என்ற சிறுமி இந்த விமான அனர்த்தத்தின் புகைப்படக் குறியீடாக மாறியுள்ளாள்.
இந்த சிறுமி ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் விமானநிலையத்தில் இருந்து ஒக்டோபர் 15 ஆம் திகதி தனது பெற்றோருடன் எகிப்துக்கு பயணம் செய்து விட்டு திரும்பி வரும் மீண்டும் திரும்பி வரும் வழியிலேயே நேற்று முன்தினம் விமான விபத்தில் பலியானாள்.
இந்த சிறுமி கடந்த 15 ஆம் திகதி தனது விமானத்தில் ஏறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விமான நிலையத்தில் கண்ணாடி வழியாக வெளியே நிற விமானங்களை பார்க்கும் காட்சியை அவரது தயார் அன்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த படம் ரஷ்யாவின் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த விபத்தில் இந்த சிறுமியுடன் அவரது பெற்றோரும் பலியாகினர்.
இந்த விமான விபத்து ரஷ்யாவில் பல அனாதைகளை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. விடுமுறை காரணமாக பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை உறவினர்களுடம் விட்டுவிட்டு எகிப்துக்கு இந்த விமானத்தில் சென்றிருந்தமையே இதற்கு கரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமானம் மனித நாசகார வேலை காரணமாகவே இடம்பெற்றிருக்கலாம் என்று விபத்துக்குள்ளான விமான நிறுவனம் தற்போது இன்று தெரிவித்துள்ளது.இந்த விமானத்தில் பயணம் செய்த 224 பெரும் பலியாகினர்.




0 Comments