Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சிறைச் சாலை உத்தியோகத்தர்களுக்கு நீதிபதி இளஞ் செழியன் அறிவுரை

சிறைச் சாலை உத்தியோகத்தர்கள் சிறைக் கைதிகளும் மனிதர்கள் தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.இலங்கைச் சிறைகளில் 1983 ஆம் ஆண்டு முதல் 75 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.இவ்வாறான சோக வரலாறு இனியும் தொடரக் கூடாது எனத் தெரிவித்தார் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ் செழியன் .
 நேற்று முன்தினம் சனிக்கிழமை (31-10-2015) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கான புதிய கட்டடத்தை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன திறந்து வைத்தார்.இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
சிறைச் சாலைகள் சீர்திருத்தக் கல்லூரிகளாக மாற வேண்டும்.பொலிசார் தங்கள் விசாரணைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கால அவகாசம் கேட்பதாலும் 24 மணி நேரத்திற்கு மேல் பொலிஸ் நிலையத்தில் வைத்திருக்க முடியாது என்பதாலும் சந்தேக நபர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றார்கள்.எனவே,நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் சிறைச் சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதைச் சிறைச் சாலை அதிகாரிகள் நினைவில் கொண்டு அவர்களைப் பண்புடன் நடத்த வேண்டும்.
1983 ஆம் ஆண்டு முதல் 75 சிறைச் சாலைக் கைதிகள் சிறைகளிலிருந்த போது கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.அவ்வாறான சோகமான வரலாறு இனிமேலும் எழுதப்படக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments