Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு பெரியபோரதீவில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி: இளைஞன் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை மாலை பெரியபோரதீவை சேர்ந்த 18வயது இளைஞர் ஒருவரையே இவ்வாறு கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞரை களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

0 Comments