ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் படங்களின் அடுத்தடுத்த வெற்றியால் ஜெயம் ரவி பிறகு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றார். இவர் சமீபத்தில் பிரபல ஹோட்டல் ஒன்றில் பார்ட்டியில் கலந்து கொண்டாராம்.
பார்ட்டி முடிந்து தன் உறவினர் ஒருவருடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது மதுரையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான சுதர்சன் அண்ணாதுரை மற்றும் அவரது நண்பர்களுக்கும் ஜெயம் ரவி தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அங்கிருந்த காவலாளிகள் சண்டையை தடுத்திருக்கிறார்கள். இந்த தாக்குதலில் ஜெயம் ரவி உறவினர் ஜாய் ஆனந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டதாம்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாய் ஆனந்த், போலீஸில் சுதர்சன் அண்ணாதுரை மீது புகார் கொடுத்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்தபோது ஜெயம் ரவியும் அங்கு இருந்தாகத் தெரிய வந்திருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளதாம். இந்த மோதலில் ஜெயம் ரவியும் தாக்கப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


0 Comments