முழுத் தலைகவசத்தை அணிவதற்கு எதிரான சட்டத்தின் மீதான இடைக்கால தடையுத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நாளை வரை அமுலில் இருந்த தடையுத்தரவு இன்று இடம்பெற்ற விசாரணையின் பின்னர் நீடிக்கப்பட்டது.
முழுத் தலைக்கவசம் அணிந்து உந்துருளி செலுத்த முடியாது என விதிக்கப்பட்ட சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக இரண்டு பேர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments