மட்டக்களப்பு, பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த பௌத்த தேரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவரான குருநாகலைச் சேர்ந்த சந்திரானந்த ஹிமி (வயது 22) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சுற்றுலா மேற்கொண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 34 பௌத்த பிக்கு மாணவர்கள் பல இடங்களுக்கும் சென்று நேற்று பாசிக்குடாவுக்கு வந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments