Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிழக்கில் மீன்பிடி தொழிலில் அரசியல் செல்வாக்கு: மீனவர் உண்ணாவிரதப் போராட்டம்

தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை உபயோகிப்பதை தடைசெய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக திருகோணமலை மீனவர்கள் அறிவித்தலொன்றை விடுத்துள்ளனர்.
கடலுார் விவேகானந்தா மீனவர் சங்கத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் இத் தீர்மானம் எட்டப்பட்டதாக திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் கெமசிறி தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லீம் மீனவர்கள் வாழ்ந்துவரும் குறித்த பிரதேசத்தில் சிலர் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை பயன்படுத்தி வருவதாகவும் இதனால் சாதாரண மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட முறைகளிலான மீன்பிடியில் சில அரசியல் செல்வாக்குகள் காணப்படுவதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முன்னெடுக்கும் ஆர்பாட்டங்கள் கண்டனங்கள் பயனற்றுப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமக்கு தொடர்ந்தும் பொய்யான கோரிக்கைகளை முன்வைக்காது தமக்கான தீர்வினை பெற்றுத்தரும் வரையில் இவ் உண்ணாவிரத போராட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments