Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எய்ட்ஸ் நோயை கண்டுபிடிக்க மருத்துவமனை செல்ல தேவையில்லை: விற்பனைக்கு வந்த நவீன கருவிகள் (வீடியோ இணைப்பு)

எயிட்ஸ் நோய் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை செல்வதற்கு பெரும்பாலனவர்கள் தயக்கம் காட்டுவதால், வீடுகளிலேயே பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் நவீன கருவிகள் தற்போது விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் தான் தற்போது இந்த கருவிகள் பொது விற்பனைக்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த AAZ என்ற நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்த எயிட்ஸ் பரிசோதனை செய்யும் கருவியை மருத்துவரின் அனுமதி இல்லாமலேயே 25 முதல் 28 யூரோக்களுக்கு பெற்றுக்கொள்ளலாம்.
இது குறித்து பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சரான Marisol Touraine பேசியபோது, தற்போது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள இந்த கருவிகள் மருத்துவமனை பரிசோதனைக்கு ஒரு மாற்று ஏற்பாடு அல்ல.
இருப்பினும், இந்த கருவிகள் மூலம் எயிட்ஸ் நோயை தடுப்பதற்கும், அந்த நோயை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உதவும்.
மருத்துவமனை சென்று எயிட்ஸ் நோய் இருக்கிறதா என தெரிந்துக்கொள்வதற்கு பதிலாக வீட்டிலிருந்த படியே இந்த கருவிகள் மூலம் கண்டுபிடித்துக்கொள்ளலாம்.
பிரான்ஸ் நாட்டில் தற்போதுள்ள புள்ளிவிபரத்தின் படி, சுமார் 30 ஆயிரம் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டும் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலனவர்களுக்கு மருத்துவமனை செல்வது அச்சம் அளிக்ககூடியதாக இருக்கிறது.
இந்த கருவிகள் மூலம் தங்களுக்கு எயிட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், சிகிச்சை குறித்து தொலைப்பேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ மருத்துவரின் உதவியை உடனடியாக நாடுவது அவசியம் ஆகும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான புள்ளிவிபரத்தில் 2013ம் ஆண்டில் மட்டும் பிரான்ஸ் நாடு முழுவதும் புதிதாக சுமார் 6,300 நபர்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments