மட்டக்களப்பு கல்லடி கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் கட்புலத் தொழிநுட்பக் கலைத் துறையினரால் வண்ணமும், வடிவமும்கட்புலக் கலைகளின் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லடி இராமகிருஸ்ண மின் சதுர்புஜானந்த ஜீ, மட்டக்களப்புமண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வே.தவராஜா, முகாமைத்து சபை உறுப்பினர் சகோதரி.ஜோசப்மேரி, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.பிரேம்குமார்,விவசாய பீடாதிபதி பேராசியர் எஸ்.சிவராஜா, நூலகர் திருமதி.தவமணி தேவிஅருள்நந்தி, இசை சடனக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.எஸ்.தட்சணாமூர்த்திஉட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதலாம் நாள் கண்காட்சியின் போது மட்டக்களப்பின் பல பாகங்களில் இருந்தும்பாடசாலை மாணவர்களும் வருகை தந்து கண்காட்சியை பார்வையிட்டனர்.
இக்கண்காட்சி 18ம் திகதி மாலை 5 மணி வரை இடம்பெறஉள்ளது. இக் கண்காட்சியை பார்வையிடுவதற்கு அனுமதிச் சீட்டாக மாணவர்களுக்கு 20.00யும்,ஏனையோருக்கு 50.00யும் அறவிடப்படும். பாடசாலை மாணவர்களுக்கான அனுமதிச் சீட்டுக்கள்பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments