மட்டக்களப்பு - கிரான்குளம் கடற்கரையோரத்திலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் சிதைவடைந்துள்ளதனால் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவ இடத்திற்கு சென்ற விஷேட பொலிஸ் பிரிவினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 Comments