Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்புளுவென்சா தொற்றினால் 10 கர்ப்பிணிகள் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்புளுவென்சா எச்1,என்1 தாக்கம் கடந்த மாதம்வரை நீடித்ததாகவும் இதன்போது, கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்ததாகவும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் விரிவுரையாளரும் நுண்ணியல் உயிரினவியலாளருமான வைத்திய கலாநிதி வி.ஆர்.வைதேகி தெரிவித்தார். இன்புளுவென்சா எச்1,என்1  தாக்கம் தொடர்பாக விழிப்புணர்வுக் கூட்டம், மட்டக்களப்பு வாசிகசாலையின் கேட்போர் கூடத்தில்  புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே, அவர் இதனைக் கூறினார்.


இங்கு மேலும் தெரிவித்த அவர், 'இன்புளுவென்சா எச்1,என்1 தாக்கத்தினால் நாடெங்கிலும் இதுவரையில் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  50 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 10 கர்ப்பிணிகளும் அடங்குகின்றனர். கடந்த வருடம் இலங்கையில் 'இன்புளுவென்சா என்1,எச்1 நோய்த் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமையினால்;, தற்போது இது குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments