Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கனடாவிற்கு நுழைபவர்களுக்கு உடனடியாக நிரந்தர வதிவிட உரிமை

கனடாவிற்குள் நுழையும் புதியவர்கள் இரண்டு வருடகாலம் காத்திருப்பதற்கு பதிலாக உடனடியாக நிரந்தர வதிவிட உரிமையை பெறுவர்கள் என லிபரல் தலைவர் ஜஸ்ரின் ட்ரூடோ பிரம்ரனில் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தலில் தான் தெரிவு செய்யப்பட்டால் கனடாவில் உடன்பிறப்புக்களை கொண்ட சாத்தியமான புலம்பெயர்வோர் நாட்டிற்குள் வருவதை இலகுவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
சார்ந்திருப்போர் வயதெல்லையை 19 தொடக்கம் 22 ஆக லிபரல் அரசாங்கம் உயர்த்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவிற்குள் வரும் வாழ்க்கைத் துணைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அந்தஸ்த்துடன் உடனடியாக நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் ட்ரூடோ கூறினார்.

கனடாவின் புலம்பெயர் சமூகங்களின் ஆதரவை பெறுவதற்காக ட்ரூடோவின் முயற்சி இது எனக் கூறப்படுகின்றது. 

Post a Comment

0 Comments