நெடுந்தீவு 9ஆம் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (26) இரவு அத்துமீறி நுழைந்த கடற்படைச் சிப்பாயை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், ஞாயிற்றுக்கிழமை (27) உத்தரவிட்டார்.
வீடொன்றுக்குள் அத்துமீறி கடற்படைச் சிப்பாய் நுழைந்த போது, அங்கிருந்தவர்கள் அபாயக் குரல் எழுப்பியதும் தப்பிச் சென்றுள்ளார். சிப்பாயின் அடையாள அட்டை வீட்டு வளாகத்தில் வீழ்ந்து கண்டுடெடுக்கப்பட்டு, அதனடிப்படையில் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிப்பாயை பொலிஸார் iது செய்தனர்.
தான் சென்ற வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் பெண் தன்னை அழைத்ததாகவும் தான் வீடு மாறிச் சென்றதாகவும் குறித்த சிப்பாய் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்தார்.
சிப்பாயை, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (27) ஆஜர்செய்த போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிா்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.

0 Comments