தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பில் விசாரணை நடாத்த கருணா அம்மான் எதிர்வரும் நாட்களில் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்படவுள்ளார்.
2006ம் ஆண்டு மட்டக்களப்பில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பில் அப்போது கிரமமான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை.
தற்போது இந்தக் கொலை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கிரமமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 Comments