யாழ்ப்பாணம் - இளவாளை பிரதேசத்தில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குசமன்துறை பிரதேசத்தில் கடத்திச் செல்லப்பட்ட 50 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர எமது செய்திச் சேவைக்கு இந்த தகவலை வெளியிட்டார்.
இதன்போது வான் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறைக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போதே சந்தேகநபர் கைதானதாக பேச்சாளர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 100 லட்சம் ரூபா என அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, சட்டவிரோதமாக 73 வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவம் அவர் தெரிவித்தார்.
0 Comments