இளம்பெண்ணிடம் பேசிய வாலிபரின் கைகளை கட்டி சரமாரியாக அடித்து உதைத்ததோடு, அவரை நிர்வாணப்படுத்திய கொடுமையும் மங்களூரில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களுரூவில் ஷாப்பிங் மாலில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர், சக ஊழியரான நண்பர் ஒருவரிடம் 2 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுப்பதற்காக அந்த பெண்ணுடன், அந்த வாலிபர் ரோட்டில் நடந்து சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் பஜ்ரங்தள் இயக்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் அந்த வாலிபரிடம் வந்து, எப்படி பெண்ணுடன் ரோட்டில் நடந்து செல்லலாம்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த வாலிபரின் கைகளை கட்டி சராமரியாக அடித்ததோடு, நிர்வாணப்படுத்தியுள்ளனர்.
இதில் அந்த வாலிபர் பலத்த காயமடைந்தார். தனது நண்பரை தாக்கிய போது அவரை காப்பற்ற முயன்ற அந்த இளம் பெண்ணையும் வன்முறைக் கும்பல் தாக்கியது.
இதில் அந்த இளம் பெண்ணும் காயமடைந்தார்.மங்களுரூவின் ஜனநெருக்கடி மிகுந்த பகுதியில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம், பொதுமக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வாலிபர் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை லோக்கல் சேனல் ஒன்று நேரடியாக ஒளிபரப்பியது.
தொலைக்காட்சியில் தாக்குதல் சம்பவத்தை பார்த்து விட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தாக்கப்பட்ட வாலிபரை அந்த கும்பலிடம் இருந்து மீட்டுள்ளனர். இது தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலரைத் தேடி வருகின்றனர்.


0 Comments