Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பைச் சேர்ந்தவர் வெளிநாட்டு நாணயங்களுடன் கட்டுநாயக்கவில் கைது!

வெளிநாட்டு நாணயங்களை தனது பயண பொதியில் மறைத்து வைத்து சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் 
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். 
கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான நபர் எனவும் அவர் 50 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான பணத்தை இவ்வாறு சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 16 ஆயிரத்து 930 பிரிட்டிஷ் பவுண்ஸ், 8 ஆயிரத்து 50 கட்டார் ரியால் மற்றும் ஆயிரத்து 350 யூரோ நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து சுங்க அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருவதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments